யா ரஸூலே ஹுதா
யா ரஸூலே ஹுதா

கெஞ்சும் குரல் கேளுங்கள்
கொஞ்சம் முகம் பாருங்கள்
நீங்கள் காணாவிட்டால் எம்மை யார் காணுவார்
                                                                                                        (யா ரஸூலே ஹுதா)

நானும் உங்கள் மண்ணில் நின்று
காணும் பாக்கியம் தாருங்களேன்
என்னில் உள்ள குறை நீங்கனும்
என் கல்பில் உள்ள கறை போக்கணும்
யா ரஹ்மத்தன் லில் ஆலமீன்
                                                                                                        (யா ரஸூலே ஹுதா)

பாவி எம்மை அழைத்திங்கே
பாவாப் பிணி நோய் தீர்ப்பீர்
உம் கடைக் கண் பார்வை பாருங்களேன்
கானா விட்டால் யார் காணுவார்
யா ரஹ்மத்தன் லில் ஆலமீன்
                                                                                                        (யா ரஸூலே ஹுதா)

கவலை தோய்ந்த எம் கல்பினை
உம் கருணை முகம் கொண்டு குளிரச் செய்வீர்
வாழ்வில் வசந்தத்தை எமக்களிப்பீர்
நீர் தராவிட்டால் யார் தருவார்
யா ரஹ்மத்தன் லில் ஆலமீன்
                                                                                                        (யா ரஸூலே ஹுதா)

தனிமை ஏக்கம் எனை வாட்டுதே
தங்கள் தீதார் தேடி தினம் ஏங்குதே
எம் காதலின் துடிப்பை கேட்பீரோ
நீங்கள் கேட்கா விட்டால் யார் கேட்பார்
யா ரஹ்மத்தன் லில் ஆலமீன்
                                                                                                        (யா ரஸூலே ஹுதா)

எந்தன் உயிர் பிரியும் நேரம்
கலிமா ஷஹாதா நான் கூறனும்
எம் கப்ரில் உங்கள் முகம் பார்க்கணும்
ஹாதா ஹபீபுல்லாஹ் நான் கூறனும்
யா ரஹ்மத்தன் லில் ஆலமீன்
                                                                                                        (யா ரஸூலே ஹுதா)

மஹ்ஷர் தன்னில் எழுப்பும் நேரம்
மன்னிப்பின் வாசல் நான் காணனும்
மன்றாடியே எமை காக்கனும்
மகிமை சுவர்க்கம் நாம் சேரனும்
யா ரஹ்மத்தன் லில் ஆலமீன்
                                                                                                        (யா ரஸூலே ஹுதா)

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2020 kayal-islam.blogspot.com | All Rights Reserved.