நாயகமானவரே நல்ல குணமுள்ளவரே
தாயகமானவரே தவப்பொருளுள்ளவரே
ஹாமீம் ஆனவரே ஹாஷிமி லுள்ளவரே
ஹாதீயாய் எனக்குதவி செய்யுமி றஸூல் நபியே

ஆதியாய் நின்று அநாதியாய் ழாஹிராகி
ஜோதியாய்த் தோன்றுகின்ற சுத்தகரே என் குருவே
பத்ரைப் போல் வெளியாகி பல் பத்ரை KhஹFபிய்யாக்கிப்
பகையை Fபனாவாக்கப் பகருமி றஸூல் நபியே

துறாபால் எனைப் படைத்துத் தோகையர்கள் மாய்கை தனைத்
தூராக்கிக் கொள்வதற்குத் துணை கிருபை செய்வீரே
Zதாபித்தாய் என் கல்பை சருகாமலாக்கி வைத்துக்
கார்த்துஎனைக்கரைசேர்க்கும் Khஹாத்திமிறஸூல் நபியே

ஜமாலென்னும் ஒளிவு தன்னில் சார்ந்திருக்க என் திஹ்னைக்
கமாலாகப் பூட்டி வைக்கும் காமிலே என் ஸனதீ
ஹக்காக வந்துதித்த கண் மணியே காரணரே
கனமான இல்மைத் தந்து காட்டுமி றஸூல் நபியே

Khகல்குகளை நெறியளவில் கொடு வரும் சிகா மணியே
Khகுல்குகளை றப்பளவில் குறித்து வைத்த புண்ணியரே
தாஇமாய் உங்கள் திரு நாமங்களை என் நாவில்
ஜாரியாய்ப் பூட்டி வைக்கும் தகுதி ஈ றஸூல் நபியே

தௌக்கு எனும் குடிப்பைத் தகுமாக என் தனக்குத்
தங்கள் கரத்தாலே தாக்கி அருள் புரிவீர்
றம்ஸை பயான் செய்யும் நலமான நாயகரே
என் நஃப்ஸிலுள்ள றம்ஸைக் காட்டுமி றஸூல் நபியே

ஸக்கிய்யத்துல் Khஹம்ஸே சலிப்புகளை நீக்கி வைத்து
சொர்க்கத்தின் மஃவாவை சுதந்திரமாய் ஆக்கி வைத்து
ஸுந்துஸ் எனும் பட்டை சொகுசாய் அணிவதற்க்கு
சொந்தமாய்த் தந்தருளும் ஸய்யிதி றஸூல் நபியே

ஷFபாஅத்து குப்றாவில் சாலிஹானவரோடு
நேசமாய் நானிருக்க நெறியான அமல்களையும்
சித்கென்னும் மெய்களையும் செப்பமாய்ப் புகட்டினக்குக்
கிஃத்பென்னும் பொய்களையும் புகைக்குமிறஸூல் நபியே

ளஜ்ரென்னும் சடைவை ழாஹிராய்ப் போக்கி வைத்து
நௌமென்னும் நித்திரையை இலகுவாக நீக்கி வைத்து
திப்பென்னும் சலவாத்தைத் திறமாகக் கொண்டு வந்து
தம் விருப்பம் பெற்றிருக்கச் செய்யுமி றஸூல் நபியே

ழாஹிர் ஷரீஅத்தையும் நலம் பெறும் தரீக்கத்தையும்
காமில் ஹக்கீகத்தினால் கத்தனை அறிவதற்கு
ஐனென்னும் மஃரிFபத்தை ஆஷிக்காய் நானுகந்து
அஹதான் ஜலாலிய்யத்தை அருளுமி றஸூல் நபியே

கொய்புகளை அறியும் காரண சற்குருவே
ழுல்மு எனும் இருளைக் கசடற நீக்கி வைப்பீர்
பனாவான நFப்ஸு தனைப் பழக்கி என் கைவசமாய்
பகாவினில் சேர்த்துவைக்கும் Fபாத்திஹி றஸூல் நபியே

குர்பென்னும் வணக்கமதைக் குணமாக என் தனக்குக் கோர்வையாய்க் கொண்டு வர கிருபை செய்யும் இரட்சகரே
கலிமாவை நானுகந்து கல்பால் உணர்ச்சி பெற்றுக்
காட்சி பெறுவதற்குக் காட்டுமி றஸூல் நபியே

லுத்Fபென்னும் திக்ரை நேர்மையாய் என் சத்ரில்
நிலைக்க அருள் செய்வீர் நிச்சயமாய்ச் சிறியனுக்கு
மக்கமென்னும் மாநிலத்தில் மஹ்மூதாய் வந்துதித்த
மாய குFப்ரு தனை மாற்றுமி றஸூல் நபியே

நூனென்னும் ஹர்Fபதனில் நுக்தாவில் அமைந்தெழுந்த
நூரென்னும் ஒளிவு தனும் நுட்பமாய் வெளி வந்து
வாசி என்ற குதிரைகளை வசமாய்க் கால் தளைந்து
வாகு பெறுவதற்கு வருத்துமி றஸூல் நபியே

ஹூஹூ வெனும் திக்ரைக் குண்டத்திலே இருத்தி
ஆவென்ற அட்சரத்தை அன்பாகச் சேர்த்து வாங்கி
லாம் அலிFபுக்குள் நிறைந்த நடுவட்டமானதுவில்
லா ஹர்Fபை ஹர்Fபாக நாடுமி றஸூல் நபியே

ஏழை யான் செய் பிழையை இறையோன் பொறுப்பதற்கு
இரக்கம் வைத்து எப்போதும் என் மனதைத் தெளிவாக்கி
ஒளிவான தக்வாவை ஓர்மையாய்க் கொண்டிருக்கத்
தேட்டம்வைத்தேனும் சமூகம்அடைந்தேன்றஸூல் நபியே

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2020 kayal-islam.blogspot.com | All Rights Reserved.